Posts

Showing posts from August, 2021

சிறுவர் இலக்கியம் பண்புகள்

 "சிறுவர் இலக்கியங்களின் பண்புகள்" முன்னுரை : சிறுவர் இலக்கியம் என்பது சிறுவர்களுக்காக எழுதப்படும் இலக்கியம் ஆகும். இது 12 வயதுக்கு உட்பட்டோருக்காக எழுதப்படுகிறது.  சிறுவர் இலக்கியம் கல்வியில் மட்டுமல்லாமல், அன்றாட வாழ்விலும் ஒரு முக்கிய இடத்தைப் பெறுகிறது. சிறுவர் இலக்கியம்: குழந்தைகள் படிப்பதற்கு ஏற்றன படைப்பதே குழந்தை இலக்கியமாகும். பெரியோர் இலக்கியம் போன்றே சிறுவர் இலக்கியமும், "சிறுகதைகள், நாவல்கள், நாடகம், கவிதை, கட்டுரை, துணுக்குகள்" என பல வடிவங்களில் எழுதப்படுகிறது. வயது 3-5, 6-9, 10-12, 13-15 என சிறுவர் இலக்கியம் மாணவர்கள் வயதிற்கேற்ப பிரிக்கப்பட்டுள்ளது. தமிழ் சிறுவர் இலக்கியங்கள்:  தமிழ் சிறுவர் இலக்கியம் என்பது தமிழ் மொழியில் உள்ள சிறுவர் இலக்கியம் ஆகும். இந்திய மொழிகளில் தமிழ்மொழியில் மட்டும்தான் குழந்தை இலக்கியம் மிகப்பெரும் அளவில் வளர்ச்சி பெற்றுள்ளது.  16-ஆம் நூற்றாண்டில் ஔவையார் தந்த "ஆத்திசூடி" குழந்தை இலக்கியத்தின் முதல் நூல் ஆகும். அதனைத் தொடர்ந்து அவருடைய கொன்றை வேந்தன், நல்வழி, மூதுரை, கல்வி ஒழுக்கம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.  20 நூற...