சிறுவர் இலக்கியம் பண்புகள்
"சிறுவர் இலக்கியங்களின் பண்புகள்"
முன்னுரை :
சிறுவர் இலக்கியம் என்பது சிறுவர்களுக்காக எழுதப்படும் இலக்கியம் ஆகும். இது 12 வயதுக்கு உட்பட்டோருக்காக எழுதப்படுகிறது.
சிறுவர் இலக்கியம் கல்வியில் மட்டுமல்லாமல், அன்றாட வாழ்விலும் ஒரு முக்கிய இடத்தைப் பெறுகிறது.
சிறுவர் இலக்கியம்:
குழந்தைகள் படிப்பதற்கு ஏற்றன படைப்பதே குழந்தை இலக்கியமாகும்.
பெரியோர் இலக்கியம் போன்றே சிறுவர் இலக்கியமும், "சிறுகதைகள், நாவல்கள், நாடகம், கவிதை, கட்டுரை, துணுக்குகள்" என பல வடிவங்களில் எழுதப்படுகிறது.
வயது 3-5, 6-9, 10-12, 13-15 என சிறுவர் இலக்கியம் மாணவர்கள் வயதிற்கேற்ப பிரிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சிறுவர் இலக்கியங்கள்:
தமிழ் சிறுவர் இலக்கியம் என்பது தமிழ் மொழியில் உள்ள சிறுவர் இலக்கியம் ஆகும்.
இந்திய மொழிகளில் தமிழ்மொழியில் மட்டும்தான் குழந்தை இலக்கியம் மிகப்பெரும் அளவில் வளர்ச்சி பெற்றுள்ளது.
16-ஆம் நூற்றாண்டில் ஔவையார் தந்த "ஆத்திசூடி" குழந்தை இலக்கியத்தின் முதல் நூல் ஆகும்.
அதனைத் தொடர்ந்து அவருடைய கொன்றை வேந்தன், நல்வழி, மூதுரை, கல்வி ஒழுக்கம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
20 நூற்றாண்டில், சிறுவர் இலக்கியம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டது.
சிறுவர் இலக்கியம் - படைப்புகள் :
தமிழ் நாட்டார் பாடல்கள் :
தாலாட்டுப் பாடல்கள்
விளையாட்டு பாடல்கள்
தமிழ் சிறுவர் விடுகதைகள் :
ஔவையார் :
ஆத்திசூடி
கொன்றை வேந்தன்
பாரதியார் :
ஓடி விளையாடு பாப்பா
இதழ்கள் :
அம்புலிமாமா
கோகுலம்
பாலமித்திரா
ரத்தினபாலா
தமிழ் சித்திரக்கதைகள் :
வாண்டுமாமா சித்திரக் கதைகள்
பூந்தளிர்
தமிழ்வாணன் சித்திரக் கதைகள்
கதைகள் :
பரமார்த்த குருவும் சீடர்களும்
பீர்பால் கதைகள்
தெனாலி இராமன் கதைகள்
பஞ்சதந்திரக் கதைகள் மற்றும்
பௌத்த ஜாதகக் கதைகள்
பாடல்கள் :
நிலா நிலா ஓடி வா
ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே
தத்தாங்கி தட்டும் பிள்ளை
கைவீசம்மா கைவீசு
சின்ன சின்ன எறும்பே சிங்கார எறும்பே
சிறுவர் இலக்கியம் - பண்புகள் :
சிறுவர் இலக்கியம் மொழி நடையிலும், பொருளிலும், நூல் அமைப்பிலும் வளர்ந்தோர் (பெரியவர்கள்) இலக்கியத்திலிருந்து வேறுபட்டது.
சிறுவர்களுக்கான வயதைப் பொறுத்து மொழி எளிமையாக அமைய வேண்டும்.
வார்த்தைகளில் எளிமை, அபார கற்பனைத்திறன், பொருளில் இனிமை, குழந்தைகளுடனானத் தொடர்பரிச்சியம், குழந்தைகள் மன உலகம், தற்கால குழந்தைகளின் வாழ்க்கை முறையை அறிதல், பொருத்தமான ஓவியங்கள் என அனைத்தும் சிறப்பாக இருத்தல் அவசியம்.
கலையை போதிக்கும் வார்த்தைகள்:
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
தாயிற் சிறந்த கோவிலும் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்
கூடி விளையாடு பாப்பா
சிறப்பாக பேசப்பட்ட நூல்கள் சில :
மலரும் உள்ளம் - அழ. வள்ளியப்பா
பாட்டிலே காந்தி கதை - அழ. வள்ளியப்பா
பறக்கும் பாப்பா - அழ.வள்ளியப்பா
பயம்மா இருக்கே - தமிழ் வாணன்
ராஜா ராணி - தங்கமணி
சாமியும் சிநேகிதர்களும் - ஆர்.கே. நாராயணன்
பொல்லாத குண்டு - பூவண்ணன்
தங்கத் தீவு - வாண்டுமாமா
மந்திர குளம் - வாண்டுமாமா
நிலா பாட்டி - பெ. தூரன்
நாட்டியராணி - பெ. தூரன்
இருட்டு எனக்கு பிடிக்கும் - ச. தமிழ் செல்வன்
பாலர் களஞ்சியம் - கல்வி கோபாலகிருஷ்ணன்
சிறுவர் இலக்கியத்திற்கான அவசியம் :
சிறுவர்கள் இளம் வயதிலிருந்தே வாசிக்கும் போது அவர்களின் மொழிவளம் பெருகுகிறது.
கற்பனை திறன் அதிகரிக்கிறது.
கற்பனை திறன் என்பது கவிதை, கட்டுரை, நாவல்களுக்கு மட்டும் தேவையான பண்பு அல்ல, அது தினசரி வாழ்வில் அன்றாடம் எதிர்கொள்ள தீர்க்க உதவும் ஆயுதம் ஆகும்.
வாசிக்கும் பழக்கம் வாயிலாக குழந்தைகளின் கிரகிக்கும் திறன், அலசி ஆராயும் திறன் மற்றும் மதிப்பிடும் திறன்கள் வளர்ச்சி அடைகின்றன.
முடிவுரை :
ஒரு மொழி தொடர்ந்து வாழ வேண்டுமானால் அது தொடர்ந்து அடுத்த தலைமுறைக்குச் சென்று சேர வேண்டும்.
நாம், அடுத்த தலைமுறையினரான குழந்தைகளுக்கு நம் தமிழ் மொழியைக் கொண்டு சேர்ப்பதில் எந்தளவுக்கு அக்கறை காட்டுகிறோம் எனப் பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது.
பெருகும் சமூக மற்றும் வாழ்வியல் மாற்றங்கள், குழந்தைகளின் வளர்ச்சியில் ஏற்பட வேண்டிய ஒரு சீரான முன்னேற்றத்திற்கு தடையாகவும் அமைந்து விடுகின்றது.
Comments
Post a Comment